புதுச்சேரி,நவ.20-
புதுச்சேரி
அரசு அலுவலகங்களில் காதுகேளாதோர்களுக்கு ஒரு விழுக்காடு வேலை வழங்கக்கோரி
காந்திநகரில் உள்ள வேலைவாய்ப்பகம் முன்பு புதுச்சேரி காதுகேளாதோர்
சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட்
கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் போராட்டத்தை துவக்கி வைத்து
பேசினார்.சங்கத்தின் தலைவர் சரவணன்,செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட சங்க
உறுப்பினர்கள் திரளாக
இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment