சென்னை, அக். 14-
மாற்றுத்திறனாளிகளுக் காக “ஊனமுற்றோர் உரி மைக்குரல் குரல்” என்ற இத ழும், தமிழ் இணையதள மும் (றறற.வயசயவனயஉ.டிசப) தொடங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆளுநர் மாளிகை யில் உள்ள அன்னபூர்ணா அரங்கில் ஞாயிறன்று (அக்.14) இதற்கான வெளியீட்டு விழா நடந்தது. ஆளுநர் ரோசய்யா ஊனமுற்றோர் உரிமைக்குரலின் முதல் இத ழையும், இணைய தளத்தை யும் துவக்கி வைத்து சிறப் புரை நிகழ்த்தினார்.அப்போது அவர் கூறு கையில், இந்த இணைய தளம் மூலம் சங்க நடவடிக் கைகள் குறித்து உறுப்பினர் கள் கூடுதலாக அறிந்து கொள்ள முடியும்.எந்த ஒரு இணையதள மும், அன்றாட நிகழ்வு களை உடனடியாக தங்கள் வலைத்தளத்தில் சேர்க்க வேண்டும் என்றார்.“கடமையுணர்வு, அர்ப்ப ணிப்பு, நேர்த்தி, சுயநலம் இல்லாத சேவை ஆகியவை ஒரு நிறுவனத்தின் மதிப்பை உயர்த்தும். இன்றைக்கு காளான்கள் போல புதிதாக பல அமைப்புகள் உருவெ டுத்து வருவதைக் காண்கி றோம். ஆனால் உண்மை யான அமைப்புகளை கண் டறிவதற்கு மிக நுணுக்க மான கண்காணிப்பு தேவைப்படுகிறது.தொண்டு நிறுவனங்கள் அல்லது சங்கங்கள் அல் லது மாற்றுத்திறனாளி களுக்கான அமைப்புகள் தங்கள் பணிகளுக்குள் மட் டும் சுருங்கிவிடக்கூடாது. அவர்கள் மாற்றுத்திறனாளி களின் குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும். மாற்றுத்திறனா ளிகளுக்கும் சமூகத்தின் இதர மக்களுக்கும் இணைப்புப் பாலமாக இருக்கவேண்டும்” என்றும் ஆளுநர் வலி யுறுத்தினார். சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.ஜான்சிராணி தலைமையில் நடைபெற்ற இந்த துவக்க நிகழ்ச்சியில் சங்கத்தின் புரவலர்கள் என். ராம், சீர்காழி டாக்டர் ஜி. சிவசிதம்பரம், தாவூத் மியா கான், சங்கத்தின் கௌரவ தலைவர் எச். ராமகிருஷ் ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள உரிமைகள், சர்வ தேச விதிமுறைகள், தேசிய சட்டங்கள், அவர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள அரசு திட்டங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மத்திய, மாநில அரசாணைகள் பற் றிய பல்வேறு தகவல்களை பொதுமக்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகை யில் “ஊனமுற்றோர் உரி மைக்குரல்” என்கிற இத ழினை தொடர்ந்து வெளி யிட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம் முடிவு செய்தது. பார்வையற்றவர்களும் பயன்படுத்தலாம்றறற.
வயசயவனயஉ.டிசப தமிழ் இணையதளம் மாற்றுத்திற னாளிகளுக்கு வேண்டிய பல் வேறு தகவல்கள், படிவங் கள், ஆணைகள் உள்ளிட்ட வற்றை பதிவிறக்கம் செய்து கொள்கிற வகையிலும், தமிழ் பேசும் மாற்றுத் திற னாளிகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தமி ழில் உருவாக்கப்பட்டுள் ளது. பார்வையற்றவர்களும் இந்த இணையதளத்தைப் பயன்படுத்த முடியும். சூஏனுஹ என்கிற மென்பொருளை தங்களுடைய கணினியில் பொருத்திக்கொள்வதன் மூலம் இந்த வசதியைப் பெற முடியும்.
