புதுச்சேரி,செப்.23-
மாற்று திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் 3விழுக்காடு இடஓதுக்கீடு வழங்க கோரி புதுச்சேரியில் பிரச்சாரம் நடைபெற்றது.
என்.ஆர்.காங்கிரஸ் அரசின் தேர்தல் வாக்குறுதியான மாத உதவித்தொகை ரூ.3ஆயிரம் மாற்று திறனாளிகளுக்கு வழங்க வேண்டும்.மாதம் வழங்கி வந்த இலவச அரிசிசை உடனே வழங்க வேண்டும்.ரயில் சேவை உள்ளிட்ட மத்திய அரசு திட்டங்களை பாரபட்சமின்றி மாற்று திறனாளிகளுக்கு அமல்படுத்த வேண்டும்.100விழுக்காடு மாற்று திறனாளிகளை திருமணம் செய்பவர்களுக்கு வேலைவாய்ப்பிலும்,கல்வியிலும் 3விழுக்காட்டை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பிரச்சாரம் நடைபெற்றது.
புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரில் இருந்து துவங்கிய ஆட்டோ பிரச்சாரத்திற்கு புதுச்சேரி அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் துணைத்தலைவர் மாயவன் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநில பொருளாளர் ராமச்சந்திரன் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார்.சங்கத்தின் தலைவர் ராஜாங்கம்,செயலாளர் சரவணன்,நிர்வாகிகள் குமார்,முருகன்,குப்புசாமி,பாலமுருகன்,சண்முகம் உள்ளிட்ட திரளான மாற்று திறனாளிகள் இப்பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.முன்னதாக அண்ணாசாலை,நேருவீதி,முத்தியால்பேட்டை,இலாஸ்பேட்டை,எல்லைபிள்ளைச்சாவடி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது.