Tuesday, December 2, 2014

Members of the Puducherry Deaf Society stage a protest in front of the Employment Exchange

Members of the Puducherry Deaf Society on Wednesday staged a protest in front of the Employment Exchange here urging the government to ensure one per cent reservation in all government departments and private establishments for the hearing impaired.

R. Saravanan, president of Puducherry Deaf Society, who led the protest, said the Employment Exchange had not taken any step in the last 30 years to provide jobs to the hearing impaired.
The government was not responding to their needs. It was yet to fulfil many Constitutional obligations towards them. Jobs for the hearing impaired should be identified in every department on a priority basis.

Members of Puducherry Deaf Society take out an awareness rally on Beach Road in Puducherry

About 200 people took out a rally on the Beach Road on Sunday on the occasion of the International Day of the Deaf to spread awareness of the various problems of the hearing-impaired and the importance of sign language.

R. Saravanan, president of Puducherry Deaf Society, who led the rally, demanded that the government appoint sign language instructors in all government departments to help them get their grievances redressed.
They should also be granted driving licences and one per cent reservation in employment opportunities, he said. 

Special teachers
The members also urged the Puducherry government to appoint special teachers for differently-abled students in all government and government-aided schools in the Union Territory.
At present there were 18 special teachers for around 3,000 differently-abled students studying from class I to XII in government and aided schools here. 

All these teachers had been appointed by the government on a temporary basis. As per the directions of the Delhi High Court and the guidelines of the Rehabilitation Council of India there must be one special teacher for five differently-abled students, the Deaf Society pointed out.

Fax/ E-Mail அனுப்பும் இயக்கம்

Fax/ E-Mail அனுப்பும் இயக்கம்

ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் பொதுச்செயலாளர் திரு.காந்தி கங்குலி, கடந்த இடது முன்னணி அரசில் முக்கிய அமைச்சராகவும் பல்லாண்டு காலம் பணியாற்றியவர். மேற்கு வங்கம் முழுவதும் நன்கு அறியப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான போராளி ஆவார். மேற்கு வங்கத்தில் தற்போது நடைபெறும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் அம்மாநிலத்தில் 60-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக இதுவரை அதிகாரபூர்வ புகார்கள் பதிவாகியுள்ளன.

இப்படிப்பட்ட அட்டூழியங்களை கண்டித்து மாற்றுத்திறனாளி அமைப்புகள் மற்றும் மற்ற ஜனநாயக இயக்கங்களோடு இணைந்து தொடர்ந்து போராடி வருகிறார் அவர். இச்சூழலில், 24 பர்கானா மாவட்டத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசின் இரு ரவுடி கோஷ்டிகளிடையே ஏற்பட்ட மோதலில் நிகழ்ந்துள்ள ரவுடி கொலையில் திரு. காந்தி கங்குலியின் பெயரையும் வேண்டுமென்றே பொய்யாக சம்பந்தப்படுத்தி ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அவரை எப்படியாவது பழிவாங்க துடிக்கிறது.

திரிணாமுல் ஆட்சியில் அம்மாநிலத்தில் ஜனநாயக இயக்கங்களுக்கு எதிரான ஒரு அசாதாரண சூழல் தொடர்வதை, சமீபத்தில் அக்கட்சியை சேர்ந்த தபஷ் பால் என்ற எம்.பி.யின் பேச்சு - எதிர்க்கட்சியினரை கொலை செய்வோம், அவர்களது குடும்பத்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வோம் - உள்ளிட்ட வார்த்தைகளால் வெறித்தனமாக பேசியுள்ளதையும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டு நாடே அதிர்ந்துள்ளதை நாம் அறிவோம்.

பொய் வழக்கை வாபஸ் பெறுக/சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக என வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பாகவும் , புதுச்சேரியில் உள்ள எங்கள் சங்கத்தின் சார்பில் பாரத பிரதமர் மற்றும் மேற்கு வங்க ஆளுநர் அவர்களுக்கும் காந்தி கங்குலி அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று ஈமெயில் மற்றும் FAX மூலம் மனு அனுப்பப்படுகிறது.

இப்படிக்கு,

-- Sd----
(இரா .சரவணன்)
செயலாளர், PARATDAC,

Puducherry Deaf Society Support Left Parties in Puducherry


மத்திய அரசைக் கண்டித்து பிப்ரவரி 3ஆம் தேதி நாடாளுமன்றம் முன்பு மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்

மத்திய அரசைக் கண்டித்து பிப்ரவரி 3ஆம் தேதி நாடாளுமன்றம் முன்பு மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக புதுச்சேரி காது கேளாதோர் சங்க மாநில நிர்வாகிகள் ஆர்.சரவணன், ஜி.பாலமுருகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

கடந்த 2007ஆம் ஆண்டு ஊனமுற்றோருக்கான ஐ.நா. விதிகளின்படி மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாப்புச் சட்டங்களை இயற்ற வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு தில்லியில் பேரணி நடத்தி, பிரதமரிடம் வலியுறுத்தியதன் அடிப்படையில் புதிய உரிமைகள் சட்ட நகல் தயாரிக்கும் பணி நடந்தது. கடந்த 2013 டிசம்பரில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தனர்.

ஆனால் காரணமின்றி புதிய உரிமைகள் சட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் உரிமைகளை பாதிக்கும் வகையில் தற்போது அச்சட்டத்தில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஊனமுற்றோரைப் பற்றிய வரையறை பழைய மருத்துவ மாதிரி அடிப்படையிலேயே உள்ளது. இது ஐ.நா. விதிகளுக்கு எதிரானதாகும். அதிக பாதிப்புள்ள பெண்கள், குழந்தைகள் பற்றிய அம்சங்கள் அதில் நீக்கப்பட்டுள்ளன.
3 சதவீத இட ஒதுக்கீடும் வேலைவாய்ப்பில் தரப்படவில்லை. தேசிய மற்றும்
மாநில அளவில் கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்படவில்லை. தற்போதுள்ள சட்டத்தை மாற்றுத் திறனாளிகள் ஏற்க மாட்டார்கள்.
எனவே உரிய திருத்தங்களோடு சட்ட நகலை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து நிறைவேற்றக் கோரி வரும் பிப்ரவரி 3ஆம் தேதி தில்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றார். நிர்வாகிகள் அபிலா, ஞானவேல், சண்முகம் உள்பட பலர் உடனிருந்தனர்.

புதுச்சேரி காதுகேளாதோர் கூட்டுறவு சங்கம் சார்பில் புதுவையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காதுகேளாத மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எஸ்எம்எஸ் கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி புதுச்சேரி காதுகேளாதோர் கூட்டுறவு சங்கம் சார்பில் புதுவையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


புதுவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காது கேளாதோர் கூட்டுறவு அமைப்புத் தலைவர் சரவணன், செயலாளர் பாலமுருகன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க துணைத்தலைவர் லட்சுமணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.

இது குறித்து புதுவை காதுகேளாதோர் கூட்டுறவு அமைப்பு தலைவர் சரவணன் கூறியது:    செல்போன் மூலம் எஸ்எம்எஸ் அனுப்பும் முறை காதுகேளாத மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு இன்றியமையாத தேவையாக மாறியுள்ளது. இந்நிலையில் தனியார் செல்போன் நிறுவனங்களும், அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் ஆகியவை சலுகைக் கட்டணத்தில் எஸ்எம்எஸ் அனுப்ப திட்டங்கள் வைத்துள்ளன.

ஒரு தொலைப்பேசி உரையாடலை, 20 எஸ்எம்எஸ்க்கள் மூலம் மாற்றுத் திறனாளிகள் தெரிவிக்க வேண்டிய சூழலில், ஒரு நாளில் ஒரு எண்ணில் இருந்து 100 எஸ்எம்எஸ்கள் மட்டுமே அனுப்ப முடியும் என்ற நிலையை தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கொண்டு வந்தது.
இதுதவிர பண்டிகை காலங்களில் ஒவ்வொரு எஸ்எம்எஸ்க்கும் கட்டணம் வசூலிக்கப்படுவதால் காதுகேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாதோர் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இந்த நடவடிக்கையை நீக்கக் கோரி மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் மற்றும் டிராய் அமைப்புக்கு பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எந்த பலனும் இல்லை. இதற்கு ஒரு தீர்வு காணும் வரை நாங்கள் போராடுவோம் என்றார் அவர்.

ஊனமுற்றோர் உரிமை களுக்கான தேசிய மேடையைச் சேர்ந்த தலைவர்கள் அடங்கிய தூதுக்குழுவினர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார்கள்.

ஊனமுற்றோர் உரி மைகளுக்கான குழு மற்றும் ஊனமுற்றோர் உரிமை களுக்கான தேசிய மேடையைச் சேர்ந்த தலைவர்கள் அடங்கிய தூதுக்குழுவினர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார்கள்.

ஊனமுற்றோர் உரிமைகள் சட்டமுன்வடிவு அடுத்த மாதம் கூடவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது கொண்டுவந்து நிறை வேற்றப்பட வேண்டும் என்று மேற்படி ஊனமுற்றோர் உரிமைகளுக்கான குழு மற் றும் ஊனமுற்றோர் உரிமை களுக்கான தேசிய மேடை ஆகியவற்றின் தலைவர்கள் அனைத்துக் கட்சித் தலைவர் களையும் அணுகி ஆதரவு திரட்டி வருகின்றனர். முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செய லாளர் பிரகாஷ்காரத்தை சந்தித்து ஆதரவு திரட்டினர். தொடர்ந்து குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத்அன்சாரி, பாஜக மாநிலங் களவை உறுப்பினர் அருண் ஜெட்லி ஆகியோரை சந்தித் தனர். காங்கிரஸ் கட்சித் தலை வர் சோனியா காந்தியைச் சந்தித்து ஆதரவு கோரினர். தங்கள் கட்சி இச்சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட முழு ஆதரவு அளித்திடும் என்கிற உறுதிமொழியை சோனி யாகாந்தி அளித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கமல் நாத்தைச் சந்தித்து இச்சட்ட முன்வடிவுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துவதாகவும் உறுதி அளித்தார். சோனியா காந்தி அளித்தஉறுதிமொழிக்கும் ஆதர வுக்கும் தூதுக்குழுவினர் நன்றி தெரிவித்தார்கள்.ஊனமுற்றோர் உரிமை களுக்கான குழுவின் கன் வீனர் ஜாவேத் அபிதி மற்றும் ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை யின் செயலாளர் முரளிதரன் உட்பட ஒன்பது பேர் இத்தூதுக்குழுவில் இடம்பெற் றிருந்தனர்.

Sunday, May 18, 2014

மாற்று திறனாலிகளுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ரூ.3ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

புதுச்சேரி,மே.18-

மாற்று திறனாலிகளுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ரூ.3ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

புதுச்சேரி காதுகேளாதோர் கூட்டுறவு சங்கத்தின் முதலாம் ஆண்டு துவக்கவிழா கோரிமேட்டில் உள்ள அன்னை தெரசா பட்டமேற்படிப்பு கருத்தரங்க அரையில் நடைபெற்றது.இவ்விழாவிற்கு சங்கத்தின் தலைவர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார்.பொதுச்செயலாளர் பி.ஜி.பாலமுருகன் முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு - புதுச்சேரிஅனைத்து வகை மாற்றுதிறனாலிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசியக்குழு உறுப்பினர் இராச.ஜெயராமன்,பொருளாளர் மதன்மேகான் உள்ளிட்ட திறளான மாற்று திறனாலிகள் விழாவில் பங்கேற்றனர்.முன்னதாக பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாற்று திறனாலிகள் ராஜசேகரன்,ராஜ்குமார் ஆகியோருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

தீர்மாணம்

மாற்று திறனாலிகளுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ரூ.3ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

காதுகேளாதோருக்கு இலவச தொகுப்பு வீடு,சமூகநலவாரியக் ஆலோசனைகுழுவில் காதுகேளாதோர் சங்கத்தித்திற்கு அனுமதிக்க வேண்டும்.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் காதுகேளாதோருக்கு வசதியாக ஒரு வரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மாணங்கள் இவ்விழாவில் நிறைவேற்றப்பட்டது.

Wednesday, January 22, 2014

குறுஞ்செய்தி அனுப்புவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை செல்பேசி நிறுவனங்கள் தளர்த்த கோரி மாற்று திறனாளிகளின் சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி,ஜன.22-
குறுஞ்செய்தி அனுப்புவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை செல்பேசி நிறுவனங்கள்  தளர்த்த கோரி  மாற்று திறனாளிகளின் சார்பில்  புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காதுகேளாதோர் வாய்ப்பேசமுடியாதோருக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ள குறுந்செய்தி அனுப்பும் வசதியை தடுக்கும் வகையில், நாள் ஒன்றுக்கு 100 குறுந்செய்தி மட்டுமே அனுப்பமுடியும்  என்ற பிஎஸ்என்எல் மற்றும் தனியார் செல்பேசி நிறுவனங்களின்   கட்டுபாட்டை உடனடியாக தளர்த்த வேண்டும்.சலுகை கட்டணத்தில் குறுஞ்செய்தி அனுப்ப திட்டங்கள் இருந்தாலும் பண்டிகை காலங்களில் இச்சலுகை மறுக்கப்பட்டு முழு கட்டணம் என்ற பெயரில் குறுஞ்செய்திக்கு கூடுதல்தொகை வசூலிப்பதை  உடனடியாக கைவிட வேண்டும்.ஒரு நிமிட தொலைப்போசி உரையாடலை காதுகேளாதவாய்பேச முடியாத மாற்று திறனாளிகள் குறுஞ்செய்தி மூலம்  உரையாடினால்,குறைந்தபட்சம்  20குறுஞ்செய்திகள் அனுப்ப நேரிடுகிறது எனவே முழுகட்டணத்தை உடனே திரும்பபெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காதுகேளாதோர் கூட்டுறவு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில துணைத்தலைவர் டி.லட்சுமனன் சிறப்பு அழைப்பாளாராக பங்கேற்று பேசினார்.புதுச்சேரி தலைவர் ராஜாங்கம்,செயலாளர் பாலமுருகன்,எல்ஐசி முகவர் சங்கத்தின் மாநில செயலாளர் ராம்ஜி,பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட உதவித்தலைவர் கொஞ்சியப்பன்  உள்ளிட்ட திரளான மாற்று திறனாளிகள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.