Saturday, June 20, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கான தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்று மாற்று திறனாளிகள் மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.



புதுச்சேரி,ஜீன்.20-

மாற்றுத்திறனாளிகளுக்கான தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்று மாற்று திறனாளிகள் மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கானோர் சங்கத்தின் 2வது புதுச்சேரி பிரதேச மாநாடு அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கட்டிடத்தில் நடைபெற்றது.இம்மாநாட்டிற்கு சங்கத்தின் துணைத்தலைவர் எஸ்.மாயவன் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.ராமச்சந்திரன் மாநாட்டை துவக்கி
வைத்து பேசினார்.எல்ஐசி முகவர் சங்கத்தின் தமிழ் மாநில செயலாளர் ஆர்.எம்.ராம்ஜி மாநாட்டை வாழ்மாற்று திறனாளிகள் மாநாடுதி பேசினார்.சங்கத்தின் செயலாளர் ஆர்.சரவணன் மாநாட்டு வேலை அறிக்கை வாசித்தார்.இறுதியாக சங்கத்தின் தமிழ்மாநில செயலாளர் எஸ்.நம்புராஜன் மாநாட்டை முடித்து வைத்து பேசினார்.

புதிய நிர்வாகிகள்

இம்மாநாட்டில் சங்கத்தின் புதிய பிரதேச தலைவராக எஸ்.மாயவன், செயலாளராக குப்புசாமி,பொருளாளராக பாலமுருகன்,துணைத்தலைவர்களாக எஸ்.ராமச்சந்திரன், முருகன், இணைச்செயலாளர்களாக ஆர்.சரவணன்,சங்கர், மற்றும் குமார், சங்கர், செல்வராஜ், ஆனந்தராஜ்,பிரசன்னா,பார்த்திபன்,பாரி,ராஜேஷ்,சொர்னா உள்ளிட்ட 16பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானங்கள்

மாற்று திறனாளிகளுக்கு கல்வியிலும்,வேலைவாய்பிலும் 5 விழுக்காடு இடஒதுக்கீடு புதுச்சேரி அரசு வழங்க வேண்டும்.அனைத்து பள்ளிகளிலும் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.கண்பார்வையற்றோர், காதுகேளாதோர்களுக்கான சிறப்பு ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும். அனைத்து அரசுதுறை அலுவலகங்களில் சருவல் நடைமேடை அமைக்க வேண்டும்.
24ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் உள்ள புதுச்சேரியில், அவர்களுக்கென தனியாக நலவாரியம் உருவாக்க வேண்டும்.தனியார் நிறுவனங்களில் வேலைவாய்பில் 3விழுக்காடு வேலைவாய்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

உண்ணாவிரதப் போராட்டம்

MARCH 17 ,2015

மாத உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி தரக்கோரி புதுச்சேரியில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.3000 ஆயிரம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உள்ள நிலையில் 18 சிறப்பு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். நிரந்தர சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், மாற்றுத்திறனாளிக்கான வேலைவாய்ப்பில் 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அரசுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் உடனே அமல்படுத்த வேண்டும்.
விலைவாசி உயர்ந்துள்ள சூழலில் மாத உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 15 கிலோ அரிசியை வழங்க வேண்டும்,மாற்றுத்திறனாளி களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் வழங்க புதுவையில் உள்ள 30 தொகுதிகளில் ஒன்றை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கவேண்டும், 100 சதம்ஊனம் உள்ள மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்வோருக்கு 3 விழுக்காடு ஒதுக்கீட்டை கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அமல்படுத்த வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை விலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில்நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு புதுச்சேரி அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்க செயலாளர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பாலமுருகன், மாயவன்,முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்க பொதுச் செயலர் எஸ்.நம்புராஜன் உரையாற்றினார் முற்போக்கு எழுத்தாளர் சங்கபொருளாளர் எஸ்.ராமச்சந்திரன் போராட்டத்தை துவக்கி வைத்தார். சிபிஎம் தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் வி.பெருமாள், பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட உதவித்தலைவர் கொளஞ்சியப்பன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Monday, January 5, 2015

காதுகேளாதோர் சங்கத்தின் சார்பில் வேலைவாய்ப்பகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி,நவ.20-
புதுச்சேரி அரசு அலுவலகங்களில் காதுகேளாதோர்களுக்கு ஒரு விழுக்காடு வேலை வழங்கக்கோரி காந்திநகரில் உள்ள வேலைவாய்ப்பகம் முன்பு புதுச்சேரி காதுகேளாதோர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.சங்கத்தின் தலைவர் சரவணன்,செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் திரளாக 
 இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.