Tuesday, June 28, 2011

மாற்று திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைக்களுக்கான பாதுகாப்பு சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது

புதுச்சேரி ஜூன் 27
மாற்று திறனாளிகளின் மாத ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அனைத்து வகை மாற்று திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைக்களுக்கான பாதுகாப்பு சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி அனைத்து வகை மாற்று திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைக்களுக்கான பாதுகாப்பு சங்கத்தின் பிரதேச செயற்குழு கூட்டம் செயற்குழு உறுப்பினர் முருகன் தலைமையில் நடைபெற்றது.பிரதேச செயலாளர் சரவணன்,நிர்வாகிகள் ஜெகன்,குப்புசாமி,பாஸ்கர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள் வருமாறு,புதுச்சேரி அரசு மற்றும் தனியார் நிறுவணங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை கல்வியிலும் வேலைவாய்பிலும் அமல்படத்த வேண்டும்.மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை உடனடியாக வழங்க வேண்டும்.மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கிவந்த இலவச அரிசி திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு மாத உதவித்தொகையை உயர்த்தி வழங்கவேண்டும்.என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.