மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
தமிழகம்,புதுவையில் நடைபெற்றது
புதுச்சேரி,டிச-5
வேலைவாய்பில் மூன்று சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தகோரி மாற்றுதிறனாலிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பில் மாற்றுதிறனாலிகளுக்கு 3சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.சட்டமன்ற தேர்தலில் அறிவித்தப்படி மாதம் ரூ.3ஆயிரம் உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
சமூகநலத்துறை அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி அனைத்துவகை மாற்றுதிறனாலிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் பிரதேச துணைதலைவர் மாயவன் தலைமை தாங்கினார்.பிரதேச செயலாளர் சரவணன் முன்னிலைவகித்தார்.மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,சிஐடியு மாவட்ட செயலாளர் கே.முருகன்,துணை செயலாளர் சுமதி,சங்கத்தின் பிரதேச தலைவர் ராஜாங்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.சங்க நிர்வாகிகள் குப்புசாமி,மணிகண்டன் உள்ளிட்ட திரளான மாற்றுதிறனாலிகள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழகம்,புதுவையில் நடைபெற்றது
சென்னை, டிச. 3-
மாற்றுத் திறனாளிகள் உத வித்தொகை பெற குடும்ப அட் டையிலிருந்து பெயர் நீக்கும் கொடுமையை கண்டித்து உலக மாற்றுத் திறனாளிகள் தினமான திங்களன்று தமிழ கம் முழுவதும் 84 இடங்களில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. புதுவையில் அரசுப் பணிகளில் மாற்றுத்திற னாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி தர்ணா போராட் டம் நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகளுக் கான மாதாந்திர உதவித் தொகை வழங்க தமிழக அரசு படுபிற்போக்குத்தனமான அறிவுக்கு ஒப்பாத கடும் விதி முறைகளை கடைப்பிடித்து வருகிறது. இதனால் லட்சக் கணக்கான மாற்றுத்திறனாளி கள் எந்த உதவியும் இல்லாமல் தமிழகத்தில் தவியாய் தவிக் கின்றனர். எமது சங்கத்தின் தொடர்ச்சியான போராட்டத் தின் விளைவாக வயது வரம் பை மட்டும் “45 வயதுக்கு மேல் தரப்படும் என்பதற்கு பதிலாக 18 வயதுக்கு மேல் தரப் படும்” என்று அரசு சமீபத்தில் விதியை மாற்றம் செய்துள்ளது. இதுவும் ஏற்புடையதல்ல. எனவே மாத உதவித்தொகை வழங்க கடைப்பிடித்து வரும் அனைத்து விதிமுறைகளை யும் நீக்க வலியுறுத்துவதோடு, எந்த நிபந்தனையுமின்றி உத வித்தொகையை வழங்க வேண்டும். ஆணையிருந்தும் அமலுக்கு வராத திட்டங்கள்ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அனைத்து அரசு மருத் துவமனைகளிலும் கண்ணால் பார்த்து அறிய முடிகிற ஊனத் திற்கு ஏதாவது ஒரு அரசு மருத் துவர் சான்று அளித்தாலே செல்லத்தக்க வகையில் மாற் றுத்திறனாளி அடையாள சான்று வழங்குவதற்கு அரசாணை போட்டு ஒன்றரை ஆண்டுக ளுக்கு மேலாகியும் இதுவரை எங்குமே அமலுக்கு வரவில் லை. இதனால் மாற்றுத்திற னாளிகள் அடையாளச் சான்று பெற கடும் அலைக்கழிப்புக்கு தொடர்ந்து உள்ளாக்கப்படு கின்றனர். மாற்றுத் திறனாளி நலவாரி யம் கடும் ஊனமுற்று முடங் கிப்போயுள்ளது.
மாவட்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து, மாற்றுத் திறனாளி அரசு திட்டங்களை கண்காணிக்க 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரசாணை போடப்பட்டும் இதுவரை எந்த மாவட்டத்திலும் அமலுக்கு வராததால் கடும் முறைகேடு கள் தொடர்ந்து நிலவுகின்றன.மாற்றுத்திறனாளி உலக தினமாகிய திங்களன்று மேற் கண்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி கோரிக்கைகள் நிறை வேறும் வரை காத்திருக்கும் போராட்டம் என தமிழகம் முழுவதும் 5408 பெண்கள் உட்பட சுமார் 12 ஆயிரம் மாற் றுத்திறனாளிகளை கோரிக் கை மனுக்களுடன் திரட்டி மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர் அலுவலகங்களுக் குள்ளும் தாலுகா தலைநகரங் களில் வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்க ளில் 31 மாவட்டங்களில், 84 மையங்களில் இப்போராட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பா.ஜான்சி ராணி, உளுந்தூர் பேட்டையில்கலந்து கொண்டு 10 பேருக்கு உடனடி ஆணை பெற்றுத்தந்தார்
. மாநில துணைத் தலைவர் தே.லட்சுமணன் சென்னை ஆலந்தூரில் கலந்து கொண்டார். மேலும் மாநிலச் செயலாளர் எஸ்.நம்புராஜன் கலந்து கொண்ட அரியலூரில் 96 பெண்கள் உட்பட 262 பேர் கைது செய்யப்பட்டனர். நாமக் கல்லில் கலந்து கொண்ட 65 பேரில் 50 பேர் கைது செய்யப் பட்டு மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலர்கள் அனை வருக்கும் சங்கத்தின் மாநிலக் குழு வாழ்த்துக்களை தெரிவித் துக்கொண்டுள்ளது.அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக் கீடு வழங்கக்கோரி புதுவை யில் தர்ணாப்போராட்டம் நடை பெற்றது.