Fax/ E-Mail அனுப்பும் இயக்கம்
ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் பொதுச்செயலாளர் திரு.காந்தி கங்குலி, கடந்த இடது முன்னணி அரசில் முக்கிய அமைச்சராகவும் பல்லாண்டு காலம் பணியாற்றியவர். மேற்கு வங்கம் முழுவதும் நன்கு அறியப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான போராளி ஆவார். மேற்கு வங்கத்தில் தற்போது நடைபெறும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் அம்மாநிலத்தில் 60-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக இதுவரை அதிகாரபூர்வ புகார்கள் பதிவாகியுள்ளன.
இப்படிப்பட்ட அட்டூழியங்களை கண்டித்து மாற்றுத்திறனாளி அமைப்புகள் மற்றும் மற்ற ஜனநாயக இயக்கங்களோடு இணைந்து தொடர்ந்து போராடி வருகிறார் அவர். இச்சூழலில், 24 பர்கானா மாவட்டத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசின் இரு ரவுடி கோஷ்டிகளிடையே ஏற்பட்ட மோதலில் நிகழ்ந்துள்ள ரவுடி கொலையில் திரு. காந்தி கங்குலியின் பெயரையும் வேண்டுமென்றே பொய்யாக சம்பந்தப்படுத்தி ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அவரை எப்படியாவது பழிவாங்க துடிக்கிறது.
திரிணாமுல் ஆட்சியில் அம்மாநிலத்தில் ஜனநாயக இயக்கங்களுக்கு எதிரான ஒரு அசாதாரண சூழல் தொடர்வதை, சமீபத்தில் அக்கட்சியை சேர்ந்த தபஷ் பால் என்ற எம்.பி.யின் பேச்சு - எதிர்க்கட்சியினரை கொலை செய்வோம், அவர்களது குடும்பத்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வோம் - உள்ளிட்ட வார்த்தைகளால் வெறித்தனமாக பேசியுள்ளதையும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டு நாடே அதிர்ந்துள்ளதை நாம் அறிவோம்.
பொய் வழக்கை வாபஸ் பெறுக/சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக என வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பாகவும் , புதுச்சேரியில் உள்ள எங்கள் சங்கத்தின் சார்பில் பாரத பிரதமர் மற்றும் மேற்கு வங்க ஆளுநர் அவர்களுக்கும் காந்தி கங்குலி அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று ஈமெயில் மற்றும் FAX மூலம் மனு அனுப்பப்படுகிறது.
இப்படிக்கு,
-- Sd----
(இரா .சரவணன்)
செயலாளர், PARATDAC,

No comments:
Post a Comment